சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய நாட்டை சேர்ந்த மூன்று பேர் பிடிப்பட்டுள்ளனர்.
Denes பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமான இருந்த வாகனம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய வகையில் பயணித்து...
சாதாரண மனிதர்களை விடவும் உடற் குறைபாடுகளை உடையவர்கள் அதிசயிக்கும் வகையில் திறமைசாலிகளாக இருப்பதை நாம் அறிவோம்.அது அவர்களின் குறைகளை மறைப்பதற்காக இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பிரத்தியேக அருளாகும்.
உடலில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ள எத்தனையோ பேர் அதைக் காரணமாக் கொண்டு பிச்சையெடுத்து சோம்பறித்தனமாக வாழ்வதை நாம் காண்கிறோம்.
ஆனால்,சிலர் அந்தக் குறைபாடுகளை வெற்றிகொண்டு தன் மானத்தோடு உழைத்து வாழ்கின்றனர்.தமக்கு குறைகள் இருப்பதையே அவர்கள் மறந்துவிடுகின்றனர்.சாதாரண மனிதர்களை விடவும் அசாதாரண திறமை படைத்தவர்களாக...
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் தாக்கப்படும் வீடியோ காட்சி வெளியானது.
Thinappuyal -
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது நேற்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா சம்பவம் தொடர்பில் காரணங்களைக் கேட்டறிவதற்கு இலங்கையிலுள்ள மலேசியாவுக்கான உயர் ஸ்தானிகரை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்துள்ளார்.
சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடை நிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
அத்துடன் அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என பணித்துள்ளார்.
மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி...
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.
Thinappuyal -
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்திலிருந்து தடம்பாய்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது.
கொட்டகலை ரயில் நிலையத்திற்கும் அட்டன் ரயில் நிலையத்திற்கும் இடையிலான கல்கந்த பகுதியிலேயே இன்று பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ரயிலின் ஒருபெட்டியே தண்டவாளத்திலிருந்து தடம் பாய்ந்துள்ளதாகவும் குறித்த பெட்டியில் பயணித்த பயணிகளை அட்டன் வரை மாற்று வழியில் ஏற்றிவந்து அட்டன் ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
...
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது நகரத்தில் வர்த்தகர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்தும் குறித்த வர்த்தகரை கைது செய்யக் கோரியும் மாநகர சபை ஊழியர்கள் இன்று முழுமையான பணிப்பகிஷ்கரிப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டனர்.
மாநகர சபை ஊழியர்கள் அனைவரும் மாநகர சபையில் இருந்து கல்முனை பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கல்முனை பொலிஸ்...
கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பரவிப் பாஞ்சான் காணி விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அங்கு சென்று பொதுமக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.
எனினும் இதுவரையில் எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்தில், பொதுமக்கள் தொடர்ந்தும் காணியை விடுவிக்குமாறு கோரி இன்று ஆறாவது நாளாகவும் போராட்டத்தில்...
மலேசியாவில் தூதுவர் மீதான தாக்குதல் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும்!- மஹிந்த ராஜபக்ஸ
Thinappuyal -
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்டதாக்குதலாகத்தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.
மலேசியா சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய மஹிந்த கட்டுநாயக்கவிமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் திட்டமிட்ட வகையிலே மலேசியா சுற்றுப்பயணம் அமைந்ததாகவும், அதன்படியேதன்னுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தான் செல்லவிருந்த விகாரைஒன்றின் தேரர் தாக்கப்பட்டமையினால் குறித்த தேரருக்கு ஏற்பட்டுள்ளபிரச்சினையை கருத்திற் கொண்டு அங்கு செல்வதை தவிர்த்து விட்டதாகவும்தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
கிழக்கிலங்கை கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், எண்ணைக்காப்பும், குடமுழுக்கும் நேற்று இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நடைபெறவுள்ளது.
இந்த கிரியை வழிபாடுகளை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலய பிரதம குரு ஆரியபாஷா விற்பன்னர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க. கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் உட்பட ஏனைய குருமார்களும் இவ்வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
முதல் நாள் கிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள்,சுவாமிக்கு...
கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில்
Thinappuyal -
படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.