ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும்
Thinappuyal -0
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், தற்போது 15 வரை குறைக்கப்பட்டுள்ளன.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நாட்டிற்கு கிடைப்பதன் ஊடாக பல நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர்...
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டள வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
எவ்வாறாயினும் காற்று கடற்...
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல் கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதி களுக்கு எவ்விதத்திலும் இடமில்லை. இது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் கருத்துகளை தெரிவித்து நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தும் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரரேரணையை கொண்டு வருவதற்கான சாத்தியம் குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமையவேண்டும் என்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா ஒப்படைத்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு உகந்ததாக கூறப்படும் ஓமந்தையில் காணப்படும் இரு இடங்களையும், தாண்டிக்குளத்திலுள்ள இடத்தையும் நேற்று முன்தினம் வவுனியாவுக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா நேரில் பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் மாவை.சேனாதிராஜா எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு...
பண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று மாலை பரவிய தீயின் வேகம் குறைவடைந்தள்ளது.
மேலும், இத்தீயினால் சுமார் 2000 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காட்டு பகுதியில் கடும் காற்று வீசுவதனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாகியிருந்தது.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்த குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தீ பரவும் வேகம் குறைவடைந்துள்ளதோடு,தீ பரவியுள்ள பகுதியிலுள்ள...
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விடத்தற்பளை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளைப் பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இருவர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் மற்றும் சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைதடி, கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய இடங்களில்...
சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி காலை மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை ஜூலை 1-ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில்...
வித்தியா கொலை வழக்கில் திடீர் திருப்பங்கள்..! ! முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகள்
Thinappuyal -
வித்தியா கொலை விசாரிக்க முதன்முதலில் 3 மேல்நீதிமன்ற நீதிபதிகள்! புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட...
தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின் ஆகிய பகுதிகளிலேயே 5.9 மற்றும் 6.2 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக...
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் மீளவும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய மாநில அரசாங்கங்கள் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணைகளை தற்போது இலங்கை பக்கம் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையர்கள் இருவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டமை குறித்து...